12 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றிய சட்டக்கல்லூரி மாணவர் கைது


12 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றிய சட்டக்கல்லூரி மாணவர் கைது
x
தினத்தந்தி 21 Jun 2023 2:30 AM IST (Updated: 21 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே 12 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றிய சட்டக்கல்லூரி மாணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை சாமியார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அல்பாசித் (வயது 22). இவர், விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் அல்பாசித் ஆசைவார்த்தை கூறினார். பின்னர் அந்த சிறுமியிடம் நைசாக பேசி, 6 பவுன் தங்க நகைகளை ஏமாற்றி வாங்கி கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து சிறுமி தரப்பில், சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விக்டோரியா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி அல்பாசித் நகையை வாங்கியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்பாசித்தை கைது செய்தனர்.


Next Story