தர்மபுரியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி வக்கீல் சங்க நிர்வாகிகள் கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் பாலு தலைமை தாங்கினார். செயலாளர் தருமன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். திருப்பூரில் மகளிர் கோர்ட்டில் பணிபுரியும் பெண் அரசு வக்கீல் மற்றும் அவருடைய மகள் அறிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு இந்த கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வழக்குகளை நடத்தும் வக்கீல்களுக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகிறது. எனவே வக்கீல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரியில் வக்கீல் சங்கத்தினர் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
Next Story