வக்கீல்கள் ஒருநாள் கோர்ட்டு புறக்கணிப்பு


வக்கீல்கள் ஒருநாள் கோர்ட்டு புறக்கணிப்பு
x

வக்கீல்கள் ஒருநாள் கோர்ட்டு புறக்கணிப்பு பணியில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை

திருச்சி வக்கீல் சங்கத்தின் முன்னாள் செயலாளர் வடிவேல் தாக்கப்பட்டதை கண்டித்தும், கடந்த 19-ந் தேதி ஆயக்குடி போலீஸ் நிலையத்தில் பழனி வக்கீல் சங்க உறுப்பினர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக் கூட்டமைப்பினர் நேற்று தமிழகம் முழுவதும் கோர்ட்டு புறக்கணிப்பு பணியில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் நேற்று மயிலாடுதுறை ஒருங்கிணைந்த கோர்ட்டில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதில், 250-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பங்கேற்றனர். இதன் காரணமாக கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டது. இதேபோல தரங்கம்பாடி மற்றும் சீர்காழியை சேர்ந்த வக்கீல்களும் ஒருநாள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர்.






Next Story