ஸ்ரீவில்லிபுத்தூரில் வக்கீல்கள் உண்ணாவிரதம்


ஸ்ரீவில்லிபுத்தூரில் வக்கீல்கள் உண்ணாவிரதம்
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் வக்கீல்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வக்கீல்கள் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதை தடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் கதிரேசன், நிர்வாகிகள் ஜெயராஜ் ஆகியோர் தலைமை தாங்கினா். இதில் 400-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.


Next Story