வக்கீல்கள் உண்ணாவிரதம்
பாபநாசத்தில் வக்கீல்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்
பாபநாசம்;
வக்கீல்கள் சுதந்திரமாக தொழில் செய்ய மத்திய மாநில அரசுகள் உடனடியாக வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் சேமநல நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசம் கோர்ட்டு எதிரில் பாபநாசம் வக்கீல்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரதத்துக்கு வக்கீல் பாஸ்கர் தலைமை தாங்கினாா். வக்கீல்கள் அரியராஜபூபதி, ஜெயக்குமார், இளையராஜா, சங்கீதா, வித்யா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தில் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story