வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் வக்கீல் சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு சங்கத் தலைவர் மாரப்பன் தலைமை தாங்கினார். இவர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த கூட்டத்தில் சங்க உறுப்பினர்களில் பெரும்பான்மை உறுப்பினர்கள், தற்போதைய நிர்வாகிகளே 2023-24-ம் ஆண்டிற்கான கரூர் வக்கீல் சங்கத்தின் நிர்வாகிகளாக தொடரவேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன்பேரில் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளே 2023-24-ம் ஆண்டிற்கான கரூர் வக்கீல் சங்கத்தின் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வக்கீல்கள் சிலர், நடப்பாண்டிற்கான வக்கீல் சங்கத் தேர்தலை முறைப்படியாக அறிவித்து நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.