வக்கீல்கள் 3-வது நாளாக ஆர்ப்பாட்டம்


வக்கீல்கள் 3-வது நாளாக ஆர்ப்பாட்டம்
x

வக்கீல்கள் 3-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

இந்திய குற்றவியல் சட்டங்களில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து பெரம்பலூரில் வக்கீல்கள் சங்கத்தினர் கடந்த 21-ந்தேதி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3-வது நாளான நேற்றும் அவர்கள் பெரம்பலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள் இந்திய குற்றவியல் சட்டங்களில் இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story