அருப்புக்கோட்ைடயில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
அருப்புக்கோட்ைடயில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் என 4 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றங்களில் முடிவு பெறும் வழக்குகளும், அதேபோல் திருச்சுழி குற்றவியல் நீதிமன்றத்தில் உள்ள முடிவு பெறும் வழக்குகளும் மேல்முறையீடு செய்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட நீதிமன்றம் செல்ல வேண்டி உள்ளது.
இதனால் அருப்புக்கோட்டையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் திறக்க வேண்டும் என காரியாபட்டி, திருச்சுழி, அருப்புக்கோட்டை ஆகிய தாலுகாவை சேர்ந்த வக்கீல்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் தற்போது வரை கூடுதல் மாவட்ட நீதிமன்றம் திறக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே அருப்புக்கோட்டையில் உடனடியாக கூடுதல் மாவட்ட நீதிமன்றம் திறக்க வலியுறுத்தி அருப்புக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து கவன ஈர்ப்பு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் சங்க தலைவர் குருசாமி தலைமையில் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்தது. அதனைத்தொடர்ந்து நீதிமன்ற வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில் செயலாளர் பாலச்சந்திரன், மூத்த வழக்கறிஞர் தங்க வடிவேலு, வக்கீல்கள் பிரபாகரன், செல்லத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.