ஜெயங்கொண்டத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


ஜெயங்கொண்டத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயங்கொண்டத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

இந்திய குற்றவியல் சட்டங்களில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து ஜெயங்கொண்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் அன்புமொழி தலைமை தாங்கினார். வக்கீல்கள் கிருஷ்ணமூர்த்தி, திருமால்தோழன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக வக்கீல் வேல்முருகன் வரவேற்றார். முடிவில் ஜெயங்கொண்டம் பார் அசோசியேஷன் வக்கீல் சங்க செயலாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.


Next Story