மயிலாடுதுறையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


மயிலாடுதுறையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-12T00:17:44+05:30)

தமிழக கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி மயிலாடுதுறையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

மயிலாடுதுறை

தமிழக கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி மயிலாடுதுறை ஒருங்கிணைந்த கோர்ட்டு முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை வக்கீல்கள் சங்கத் தலைவர் வேலு.குணவேந்தன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், தமிழக மக்களின் மாபெரும் போராட்டத்திற்கு பிறகு உருவான தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்றதும், தமிழக சட்டப்பேரவையில் அரசு தயாரித்த உரையில் இருந்த பெரியார், அம்பேத்கர், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் பெயரை உச்சரிக்காமலும், பொங்கல் விழா என்ற பெயரில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் தமிழக அரசின் எம்பளத்தை அச்சிடாமலும் தொடர்ந்து தமிழக அரசிற்கும், தமிழக மக்களுக்கும் எதிராக செயல்பட்டு வரும் தமிழக கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வக்கீல்கள் பாலு, பிரபாகரன், சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story