கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சிக்கு வாகனங்கள் செல்லும் பாதையை நகராட்சி தலைவர் ஆய்வு


கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சிக்கு   வாகனங்கள் செல்லும் பாதையை நகராட்சி தலைவர் ஆய்வு
x

கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சிக்கு வாகனங்கள் செல்லும் பாதையை நகராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் இந்த மாதம் (ஜூன்) அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெற உள்ளது. மாங்கனி கண்காட்சிக்கு செல்ல பெங்களூரு சாலை மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிரதான நுழைவு வாயில்கள் உள்ளன. இதில் லாரிகள் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் செல்ல முடியாது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரு சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சிறப்பு வழி அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டி வருகின்றனர்.

இதனால் மாங்கனி விழாவிற்கு பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் செல்ல வழியில்லாததால், நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, வேளாண் அலுவலர் அருள்தாஸ், மாங்கனி விழா பொறுப்பாளர் பாலாஜி, தி.மு.க. நகர செயலாளர் நவாப் ஆகியோர், வாகனங்கள் செல்லும் பாதையை ஆய்வு செய்தனர். மேலும் கட்டிடத்தின் உரிமையாளரிடம் மாங்கனி விழா முடியும் வரை 2 வழிகளில் வாகனங்கள் செல்வதற்கு மண்ணை கொட்டி வழி அமைத்து கொள்ள அனுமதிக்குமாறு வலியுறுத்தினர். அப்போது கவுன்சிலர்கள் செந்தில்குமார், மீனா நடராஜன், சுனில்குமார், புவனேஸ்வரி, தேன்மொழி மாதேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story