பெரம்பலூரில் இன்று சட்ட உதவி விழிப்புணர்வு முகாம்
பெரம்பலூரில் சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
பெரம்பலூர்
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் பேரில், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் அரசின் பல்வேறு துறைகள் இணைந்து நடத்தும் சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. மேலும் முகாமில் பொதுமக்கள் விழிப்புணர்வு அடைந்திடும் வகையில் அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பற்றி அந்தந்த துறையின் அலுவலர்கள் கலந்து கொண்டு விரிவாக எடுத்து விளக்கும் விதமாக கண்காட்சியும் நடைபெறவுள்ளது. முகாமில் பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story