ஈரோடு மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விலை குறைந்தது
ஈரோடு மார்க்கெட்டில் எலுமிச்சை பழம் விலை குறைந்தது.
ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு கொடைக்கானல், திண்டுக்கல், பெரியகுளம், தேனி, கம்பம் போன்ற பகுதிகளில் இருந்து எலுமிச்சை பழம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தினமும் 3 டன் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் விலை கிடுகிடுவென உயர்ந்து கடந்த மாதம் எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையானது.
இந்நிலையில் தற்போது எலுமிச்சை பழம் விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால் ஈரோடு மார்க்கெட்டுக்கு எலுமிச்சை பழம் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நேற்று மட்டும் 5 டன் எலுமிச்சை பழம் விற்பனைக்கு வந்துள்ளது. வரத்து அதிகரிக்க தொடங்கியதன் எதிரொலியாக விலையும் சரிய தொடங்கியது. நேற்று ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.80 -க்கு விற்பனையானது. சில்லறையில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.5 -க்கு விற்பனையானது.