குன்னூரில் தவக்கால பரிகார பவனி


குன்னூரில் தவக்கால பரிகார பவனி
x
தினத்தந்தி 1 April 2023 12:15 AM IST (Updated: 1 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் தவக்கால பரிகார பவனி நடந்தது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் புனித செபஸ்தியார் ஆலயக்குழு, கேட்டில் பவுண்டு புனித தோமையார் ஆலயக் குழு, பர்லியார் அன்னை வேளாங்கண்ணி ஆலயக்குழு சார்பில், இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவுகூரும் வகையில் கடந்த 13 ஆண்டுகளாக தவக்கால பரிகார பவனி நடத்தப்பட்டு வருகிறது. இந்த பவனி குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள பர்லியாரிலிருந்து குன்னூர் செபஸ்தியார் ஆலயம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் பவனி நடைபெறுகிறது.

இந்த ஆண்டிற்கான தவக்கால பரிகார பவனி நேற்று காலை 7.30 மணிக்கு பர்லியார் புனித அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் இருந்து தொடங்கியது. பவனி குறும்பாடி, கே.என்.ஆர்.நகர், மரப்பாலம், காட்டேரி, குன்னூர் பஸ் நிலையம் வழியாக மவுண்ட் ரோட்டில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தை மாலை 3.30 மணிக்கு வந்தடைந்தது. வரும் வழியில் ஆங்காங்கே பவனி நிறுத்தப்பட்டு, சிலுவை பாடு குறித்த பாடல்கள் பாடப்பட்டு பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டது. பின்னர் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை மார்டின் புதுச்சேரி, அந்தோணி, டோமி தாமஸ், செயலாளர் ஜோசப், மற்றும் சதிஷ் வில்பர்ட் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story