தேவாலயங்களில் தவக்கால வழிபாடு தொடக்கம்


தேவாலயங்களில் தவக்கால வழிபாடு தொடக்கம்
x

சாம்பல் புதனையொட்டி தேவாலயங்களில் தவக்கால வழிபாடு தொடங்கியது.

விருதுநகர்

சாம்பல் புதனையொட்டி தேவாலயங்களில் தவக்கால வழிபாடு தொடங்கியது.

தவக்காலம் தொடக்கம்

ஏசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் முதல் 40 நாட்கள் நோன்பிருந்து தவ வாழ்வு, அறவாழ்வு, ஜெப வாழ்வை மேற்கொண்டு 7 வெள்ளிக்கிழமைகளில் ஏசு கிறிஸ்துவின் 14 திருப்பாடுகளை தியானிக்கும் சிலுவைப்பாதை வழிபாடுகளை நடத்துவார்கள்.

சாம்பல் புதன் முதல் புனித வெள்ளி முடியவுள்ள 40 நாட்களிலும் திருச்சடங்குகள் நடத்தும் குருக்கள் சிவப்பு அல்லது நீல நிற உடைகள் அணிந்து திருப்பலிகளை நடத்துவார்கள். இத்தினத்தை முன்னிட்டு விருதுநகர் தூய இன்னாசியார் ஆலயத்தில் மறைவட்ட அதிபரும் பங்கு தந்தையுமான அருள்ராயன் அடிகளார், துணைப் பங்கு தந்தை சகாய ஜான் பிரிட்டோ அடிகளார் ஆகியோர் கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு தவக்காலத்தை தொடங்கி வைத்தனர்.

சிலுவை அடையாளம்

பாண்டியன் நகர் தூய சவேரியார் ஆலயத்தில் பங்கு தந்தை ஸ்டீபன் சேவியர் அடிகளார், துணை பங்குத்தந்தை மார்ட்டின் குமார் அடிகளார், எஸ்.எப். எஸ். மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆரோக்கியம் அடிகளார் ஆகியோரும், நிறைவாழ்வுநகர் தூய ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அந்தோணிசாமி அடிகளார் தலைமையிலும், ஆர்.ஆர். நகர் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை பீட்டர் ராய் அடிகளார், துணை பங்கு தந்தை அருள் தாஸ் அடிகளார் ஆகியோர் தலைமையிலும் சாம்பல் புதனையொட்டி கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு தவக்காலத்தினை தொடங்கி வைத்தனர்.

சாத்தூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் பங்குத்தந்தை போதகர் மைக்கேல்ராஜ் அடிகளார் தலைமையிலும், சாத்தூர் அருகில் உள்ள ஒத்தையால் குழந்தை இயேசு ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெயராஜ் அடிகளார் தலைமையிலும், சிவகாசி புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜான் மார்ட்டின் அடிகளார் தலைமையிலும், புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜான் மார்டின் அடிகளார் தலைமையிலும் சாம்பல் புதனையொட்டி கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு தவக்காலத்தினை தொடங்கி வைத்தனர். இ்ந்த தவக்கால வழிபாடு ஏப்ரல் 7-ந் தேதி வரை நடைபெறும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் குருசேகரத்தலைவர் மற்றும் சபைகுரு பால் தினகரன் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.


Next Story