காங்கயம் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக தேங்காய் உலர் களங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது.

காங்கயம் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக தேங்காய் உலர் களங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது.
x

காங்கயம் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக தேங்காய் உலர் களங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது.

திருப்பூர்

காங்கயம், நவ.5-

காங்கயம் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக தேங்காய் உலர் களங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது.

தேங்காய் உலர் களங்கள்

காங்கயம் பகுதியில் அதிக அளவில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இயற்கையில் அமைந்த சீதோஷ்ண நிலை தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிக்கு ஏதுவாக உள்ளதால் அதிகளவில் களங்களை அமைத்துள்ளனர். தேங்காய் எண்ணை உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்து பணிகளும் திறந்தவெளியிலேயே நடைபெற்று வருகிறது.

தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலர்த்துவது ஆகிய பணிகள் திறந்த வெளியிலேயே நடைபெறுவதால் தொடர்மழை பெய்யும் காலங்களில் இந்தப் பணிகள் முற்றிலுமாகப் பாதிப்படும் சூழ் நிலை உள்ளது.

பணிகள் பாதிப்பு

இந்த நிலையில் காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன், அவ்வப்போது லேசான சாரல் மழையும், கன மழையும் பெய்து வந்தது. மேலும் நேற்று மதியம் காங்கயம் பகுதியில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்தது. தொடர்ந்து காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் பகல் முழுவதும் குளிர் காற்று வீசியது.

அவ்வப்போது விட்டு விட்டு பெய்த லேசான சாரல் மழையால் தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உடைக்கப்பட்டு களங்களில் உலர்த்தப்பட்டு வரும் தேங்காய் பருப்புகளை குவியல் குவியலாக களங்களில் குவித்து வைத்து தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டது. இதனால் நேற்று காங்கயம் மற்றும் சுற்றுவட்டார தேங்காய் களங்களில் தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

Next Story