குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலி


குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலி
x
தினத்தந்தி 12 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தளி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தைப்புலியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தளி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுத்தைப்புலி

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைப்புலிகள், காட்டு எருமைகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்விடமாக உள்ளன. இந்த வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள் அவ்வப்போது அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுவது வழக்கமாக உள்ளது.

அதேபோல பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தைப்புலி ஒன்று தளி அருகில் உள்ள பூத்தனஅள்ளி கிராம குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் சுற்றித்திரிகிறது. கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் முன்பு சிறுத்தைப்புலி பதுங்கி நடந்து செல்லும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவாகி உள்ளது. இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் அச்சம்

இதை பார்த்த பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கர்நாடக மாநில வனத்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று சிறுத்தைப்புலியின் கால் தடங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

வனப்பகுதிக்கு மிக அருகே இந்த கிராமம் இருப்பதால் சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் பூத்தனஅள்ளி கிராம பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


Next Story