குற்றாலம் அருவிகளில் குறைவான தண்ணீர்


குற்றாலம் அருவிகளில் குறைவான தண்ணீர்
x

குற்றாலம் அருவிகளில் குறைவான தண்ணீர் விழுகிறது. சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்

தென்காசி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெய்த சாரல் மழையினால் அருவிகளில் தண்ணீர் சற்று அதிகரித்து விழுந்தது. ஆனால் தற்போது மழை இல்லாததால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குறைவாக ஆனாலும் நேற்று சுற்றுலா பயணிகள் வந்து அருவிகளில் குளித்து விட்டு சென்றனர்.

வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் சாரல் மழை தற்போது மிகவும் குறைவாக உள்ளது. இந்தநிலையில் அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் மிகவும் குறைவாக உள்ளது. இனி மழை பெய்தால்தான் அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கும்.



Next Story