வாழ்நாள் முழுவதும் சமூகநீதிக்காக போராடிய ரெட்டைமலை சீனிவாசன் புகழை போற்றுவோம்: எடப்பாடி பழனிசாமி
சமூக சீர்திருத்த செயற்பாட்டாளர் இரட்டைமலை சீனிவாசனின் 77வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
சென்னை,
சமூக சீர்திருத்த செயற்பாட்டாளர் ரெட்டைமலை சீனிவாசனின் 77வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவுதினத்தையொட்டி பல்வேறு தலைவர்கள் அவரின் புகழை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய டுவீட்டரில் ரெட்டைமலை சீனிவாசனின் நினைவுதினம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
"கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம்" என்று முழங்கி, விளிம்புநிலை மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்து, வாழ்நாள் முழுவதும் சமூகநீதிக்காக போராடிய சமூக சீர்திருத்தப் புரட்சியாளர் ஐயா.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாளில் அவர்தம் பெரும்புகழை போற்றி நினைவு கூர்கிறேன். அவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story