இணைவோம் மகிழ்வோம் நிகழ்ச்சி


இணைவோம் மகிழ்வோம் நிகழ்ச்சி
x

இணைவோம் மகிழ்வோம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வடக்கு நடுநிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த "இணைவோம் மகிழ்வோம்" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஹரி சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நாம் எவ்வாறு உதவியாக இருக்க வேண்டும். அவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் ஆகியவை பற்றி விளக்கி கூறினார். பின்னர் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


Next Story