வாழ்ந்து காட்டுவோம் திட்ட முகாம்
நாங்குநேரி அருகே வாழ்ந்து காட்டுவோம் திட்ட முகாம் நடந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
நாங்குநேரி அருகே உள்ள சிங்கநேரியில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித்துறை வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சமுதாயத்திறன் பள்ளி மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரித்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமுக்கு சிங்கநேரி ஊராட்சிமன்ற தலைவர் முத்துசொர்ணம் சண்முகசுந்தரம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் வட்டாரஅணி தலைவர் விசுவாசராஜ், டி.வி.எஸ். கள இயக்குனர் லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொடக்க வேளாண்மை கூட்டுறவுவங்கி மேலாளர் அப்பு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கணக்காளர் புஷ்பரதி, தொழிற்சார் வல்லுநர் சிவன்கனி ஆகியோர் பேசினார்கள். மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் திறன் பயிற்சியில் பங்குபெற்று பயிற்சி மேற்கொண்டார்கள்.
Related Tags :
Next Story