கள்ளக்குறிச்சியில்ஜனநாயகம் காப்போம் பேரணிவிடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்தது


கள்ளக்குறிச்சியில்ஜனநாயகம் காப்போம் பேரணிவிடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்தது
x
தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஜனநாயகம் காப்போம் பேரணி நடந்தது.

கள்ளக்குறிச்சி

அம்பேத்கர் பிறந்த நாளன்று மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஜனநாயகம் காப்போம் அணிவகுப்பு பேரணி மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. அறிவித்து இருந்தார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று மாலை கள்ளக்குறிச்சியில் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று சமத்துவ நாள் ஜனநாயகம் காப்போம் அணிவகுப்பு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட செயலாளர் தமிழ்மாறன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் கலையழகன், மாவட்ட செய்தி தொடர்பாளர் அனிச்சமலரவன், தலைமை நிலைய செயலாளர் தாமரைவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் சங்கத்தமிழன் கலந்து கொண்டு வாகனத்தில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவ படத்துக்கு மாலை அணிவித்து, பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் வி.சி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பியபடி சென்றனர். இந்த பேரணியானது அண்ணா நகரில் இருந்து புறப்பட்டு சேலம் மெயின்ரோடு, நான்குமுனை சந்திப்பு வழியாக கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலையை வந்தடைந்தது. அதன்பிறகு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. பேரணியாக சென்றபோது அம்பேத்கர் உருவ படம் வைக்கப்பட்ட வாகனமும் முன்னால் சென்றது.

பேரணியில் நிர்வாகி தமிழழகன், தொகுதி செயலாளர்கள் மதியழகன், சிலம்பன், அம்பிகாபதி, தமிழ் பொன்னி, மாநில நிர்வாகிகள் பாசறைபாலு, பொன்னிவளவன், பேரறிவாளன், கோவேந்தன், வீரவளவன், முருகவேல், கருப்புதுரை, ஒன்றிய செயலாளர்கள் மாணிக்க நிலவன், அலெக்ஸாண்டர், சுந்தர்ராஜன், தலித்சந்திரன், வேலு, பன்னீர்செல்வம், கனக சபை, சேகர், குபேந்திரன், பழனி, சக்திவேல், கலைஅமுதன், ஒன்றிய பொறுப்பாளர் சின்னதுரை, சமூக ஊடக மைய மாவட்ட அமைப்பாளர் சரவணன், நகர செயலாளர்கள் பாவரசு, இடிமுரசு, சாரங்கன், சீனு, சக்திவேல் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story