போதைக்கு எதிராக ஒன்றிணைவோம் கையெழுத்து இயக்கம்


போதைக்கு எதிராக ஒன்றிணைவோம் கையெழுத்து இயக்கம்
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிராக ஒன்றிணைவோம் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை

போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1 கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முதல் வருகிற 27-ந்தேதி வரை போதை பொருட்களை முழுமையாக தடை செய்திட வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்க போதைக்கு எதிராக ஒன்றிணைவோம் கையெழுத்து இயக்கத்தை மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் போதைக்கு எதிராக கையொப்பமிட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொறுப்பாளர்கள் போதைப் பொருட்களுக்கு எதிராக கண்டன உரையாற்றினர்.


Next Story