நடப்போம், நலம்பெறுவோம் நிகழ்ச்சி:8 கி.மீ. தூரம் நடந்து சென்ற கலெக்டர்
நடப்போம், நலம்பெறுவோம் என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்த தேனி கலெக்டர் நடைபயிற்சி மேற்கொண்டார்.
தேனி
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு பணிக்காக தேனி மாவட்டத்திற்கு வந்திருந்தார். அப்போது தேனியில் நடப்போம் நலம்பெறுவோம் என்ற நிகழ்ச்சிக்காக அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் நடப்போம் நலம்பெறுவோம் என்ற நிகழ்ச்சி ஆண்டிப்பட்டியில் நேற்று நடந்தது.
இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏ. மகாராஜன் ஆகியோர் நடைபயிற்சி மேற்கொண்டனர். ஆண்டிப்பட்டியில் தொடங்கி ஜம்புலிபுத்தூர், முத்துகிருஷ்ணாபுரம் வழியாக மீண்டும் ஆண்டிப்பட்டி வரையிலான 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சி சென்றனர். இதில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story