விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் லாடபுரம் கிராமத்தில் ஆதிதிராவிட மக்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறை கும்பலை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அனைத்து கட்சி, அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story