விடுதலை சிறுத்தைகள் கட்சி தெருமுனை கூட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி தெருமுனை கூட்டம்
x

காயல்பட்டினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தெருமுனை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசிய பா.ஜனதா செய்தி தொடர்பாளர் உள்ளிட்டவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யக்கோரி காயல்பட்டினத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்க பேரவை மற்றும் காயல் சமூகநீதி பேரவை ஆகியவை இணைந்து கண்டன தெருமுனை கூட்டம் நடத்தினர்.

சமூகநீதி பேரவை தலைவர் முகமது அலி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் இளந்தளிர் முத்து ஆகியோர் தலைமை தாங்கினர். கபீர், இல்யாஸ் அகமது, மூஸா நெய்னா, அல் அமீன், வேம்படி முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், மாநில கருத்தியல் பரப்பு துணை செயலாளர் தமிழ் குட்டி, சமூகநீதி பேரவை செயலாளர் வக்கீல் அஹமது சாஹிப், நிர்வாகி காதர் சாகிப், தமிழக வாழ்வுரிமை கட்சி காயல்பட்டினம் நகர செயலாளர் மஸ்ம்மில், ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் டேவிட் ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story