ஆற்காட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்


ஆற்காட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
x

ஆற்காட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனை அவதூராக பேசியதாக கூறி அதனை கண்டிக்கும் வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உருவ பொம்மை எரிப்பு, கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரச் செயலாளர் பாக்யராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சம்பத், மாவட்ட துணைச் செயலாளர் தமிழ், ராணிப்பேட்டை நகர மன்ற துணைத் தலைவர் சீ.ம.ரமேஷ் கருணா, செய்தி தொடர்பாளர் விஷாரம் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் முண்டா சார்லஸ் கலந்து கொண்டார். அர்ஜுன் சம்பத் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உருவப் பொம்மையை எரித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் நிர்வாகிகள் பிரபுதாஸ், சிவா, அருளீஸ்வரன், சுரேஷ், தலித் சந்திரன், குட்டி, சுதானந்தன், நாகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உருவ பொம்மை எரித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


Related Tags :
Next Story