பேனரை அகற்ற முயன்ற போலீசாருடன் வி.சி.க.வினர் வாக்குவாதம்கடலூரில் பரபரப்பு
பேனரை அகற்ற முயன்ற போலீசாருடன் வி.சி.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
கடலூர் கோண்டூரை சேர்ந்தவர் சீனு. விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த இவர், மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும் கோண்டூரில் பேனர் வைத்திருந்தார். இதுபற்றி அறிந்த பா.ஜ.க.வினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம் பேனரை அகற்றும்படி தெரிவித்தனர். அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், இந்த பேனர் இங்கு இருந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும், அதனால் கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்று கூறினர். அதன் பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார், அந்த பேனரை அகற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.