விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்
தியாகதுருகம் ஒன்றிய, நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்
தியாகதுருகம்
தியாகதுருகம் ஒன்றிய, நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிறப்பு செயற்குழு கூட்டம் அங்குள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் கலையமுதன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் சேகர், பொருளாளர் சின்னதுரை, நகர செயலாளர் சீனு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற தொகுதி செயலாளர் மதியழகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாறன் கலந்து கொண்டு வருகிற ஏப்ரல் 14-ந் தேதி அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகரில் மத்திய அரசை கண்டித்து ஜனநாயகம் காப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி நடைபெற உள்ள விடுதலை சிறுத்தைகள் அணிவகுப்பு பேரணியில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றார். இதில் மாநில இளைஞரணி செயலாளர் சங்கத்தமிழன், தொண்டரணி செயலாளர் கூத்தக்குடி பாலு, இளைஞர் அணி துணை செயலாளர் பொன்னிவளவன், மாவட்ட துணை செயலாளர் ராமமூர்த்தி, செய்தி தொடர்பாளர் அனிச்சமலரவன், முகாம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் ஆதிகர்ணன் நன்றி கூறினார்.