விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பங்கேற்பு


விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம்  தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பங்கேற்பு
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டார்.

விழுப்புரம்


செஞ்சி,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று செஞ்சி பகுதியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதில் செஞ்சி அடுத்த மீனம்பூர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், அவர் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி வைத்தார். பின்னர் காரை கிராமத்தில் அம்பேத்கர் படிப்பகம் திறப்பு விழா மற்றும் மணிவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதற்கு தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, அம்பேத்கர் படிப்பகத்தை திறந்து வைத்தார்.

பொதுக்கூட்டம்

இதை தொடர்ந்து நடந்த மணிவிழா பொதுக்கூட்டத்துக்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சேரன் தலைமை தாங்கினார். செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

இதில், ஆரணி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் நன்மாறன், செஞ்சி நகர செயலாளர் செஞ்சி சிவா, மயிலம் தொகுதி செயலாளர் செல்வசீமானம், ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி வெங்கடேசன், இஸ்லாமிய பேரவை மாநில செயலாளர் அப்ரார் உசேன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வெங்கடேசன், காமராஜ், தலித் மகிழ்வரசு, பிரபு, சேகர், துரை சங்கர், திருநாவுக்கரசு, வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராமு எழிலரசன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ரமேஷ், சுதாகரன், பாஞ்சாலம் ஞானவேல், பால திருவளவன், சுதாகர், பிரபாகரன், கன்னியப்பன், அஜய், ராம்கி, வினோத், தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காரை முகாம் நிர்வாகிகள் வேலாயுதம், காளிதாஸ் ஆகியோர் நன்றி கூறினார்கள்.


Next Story