விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், தேனி பழைய பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், தேனி பழைய பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் சுருளி முன்னிலை வகித்தார். மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல் வரவேற்றார். மாநில செயலாளர் வில்லவன் கோதை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். முடிவில் நகர செயலாளர் ஈஸ்வரன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்தவர்களை கண்டித்தும், இந்த செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், வடுகப்பட்டியில் பொதுப்பாதையில் மாடுகளை அழைத்துச் சென்றவர்களை தாக்கிய நபர்களை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story