விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்
நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திராதேவி மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலை கண்டித்தும், கொலை குற்றவாளிகளை நீதிபதியின் முன்பு நிறுத்தி விரைந்து தண்டனை பெற்றுத்தர தமிழக அரசை வலியுறுத்தி பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதிய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் ரத்தினவேல் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் கலையரசன் முன்னிலை வகித்தார். மாநில விவசாய அணி செயலாளர் வீர.செங்கோலன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story