விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்
திருவள்ளூவர் மற்றும் பெரியாரை தொடர்ந்து அம்பேத்கர் உருவப்படத்திற்கு காவி, திருநீறு, குங்குமம் இட்டு அவரை அவமதிக்கும் சனாதன சங்கபரிவார் அமைப்புகளை கண்டித்து கரூா் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.
பொருளாளர் அவிநாசி முன்னிலை வகித்தார். விவசாய அணி மாநில செயலாளர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அகரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story