சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மண்டல செயலாளர் நாவரசன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த், மாநகர் மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன், கவுன்சிலர் இமயவரம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர், பெரியார், திருவள்ளுவரை அவமதிக்கும் கும்பலை கைது செய்ய வேண்டும், வரலாற்றை திரித்து வன்முறையை தூண்டும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது. இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story