விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் தனபால் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ராமமூர்த்தி, மாநில எழுச்சி பாசறை துணை செயலாளர் பொன்னிவளவன், மாநில தொண்டரணி துணைத் தலைவர் கூத்தக்குடி.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில அமைப்பு செயலாளர் உஞ்சை அரசன் கலந்துகொண்டு வேங்கைவயலில் அசுத்தம் செய்யப்பட்ட குடிநீர் தொட்டியை இடிக்க வேண்டும். ஆதிதிராவிட சமூகத்திற்கு தனியாக குடிநீர் தொட்டி கட்டி கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் அனிச்சமலரவன், தொகுதி செயலாளர் மதியழகன், நிர்வாகிகள் விடுதலை மணி, இனியன், பாவரசு, தமிழழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்