விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்
திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் கடைத்தெருவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நாகை தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். திருமருகல் தொண்டரணி ஒன்றிய அமைப்பாளர் அரவிந்த்வளவன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு அம்மையப்பனில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி கவியரசன் வெட்டி கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், கொலைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story