விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் கடலூர் மாவட்டம், புவனகிரி ஒன்றியம், சாத்தப்பாடி கிராமத்தில் தலித் இளைஞர்களை தாக்கிய சாதி வெறியர்களை கண்டித்தும், அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யக்கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story