விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த கட்டிட திறப்பு விழாவிற்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்காததை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சட்டையில் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். சிலர் கருப்பு ஆடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story