கடத்தூர் பேரூராட்சியில் ரூ.20 லட்சத்தில் நூலக கட்டுமான பணி


கடத்தூர் பேரூராட்சியில் ரூ.20 லட்சத்தில் நூலக கட்டுமான பணி
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

கடத்தூர் பேரூராட்சி பகுதியில் புதியதாக ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 2 அடுக்கு நூலக கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. விழாவுக்கு கோவிந்தசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பூமிபூஜை செய்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இந்த பணியை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், முருகன், ஒன்றிய குழு துணை தலைவர் சக்திவேல், நகர செயலாளர் சந்தோஷ், வார்டு உறுப்பினர்கள் சபியுல்லா, முருகன், மற்றும் கட்சி நிர்வாகிகள் ரவி, சசிகுமார், அம்பேத்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story