நூலக வார விழா


நூலக வார விழா
x

வேதாரண்யத்தில் நூலக வார விழா நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் நூலக வார விழா வேதாரண்யம் நூலக வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு வாசகர் வட்ட தலைவர் குழந்தைவேல் தலைமை தாங்கினார். நூலகர் முத்துசாமி வரவேற்றார். விழாவில் சமூக நல தனி தாசில்தார் ரமேஷ், ஓய்வு பெற்ற வட்டார கல்வி அலுவலர் பக்கிரிசாமி ஆகியோர் கலந்து கொண்டு நூலகத்தின் அவசியத்தையும் அதனுடைய பயன்களையும் குறித்து பேசினர். விழாவில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நூலகம் இயங்கிவந்த இடத்தில் புதிய நூலகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான வாசகர் வட்டத்தினர் கலந்து கொண்டனர். முடிவில் வாசகர் வட்ட பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.


Next Story