வேதாரண்யத்தில், எல்.ஐ.சி முகவர்கள் ஆர்ப்பாட்டம்
24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திவேதாரண்யத்தில், எல்.ஐ.சி முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு முகவர் விஜயராமன் தலைமை தாங்கினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்ட துணை தலைவர் செல்வகுமார், திருத்துறைப்பூண்டி கிளை தலைவர் வேல்முருகன் ஆகியோர் பேசினர். இதில் எல்.ஐ.சி. முகவர்கள் அறிவழகன், கணேசன், வெற்றிவேல், காசிநாதன், சண்முகம், செல்வகுமார், வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாலிசிதாரர்களுக்கான போனஸ் தொகையை உயர்த்த வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். முகவர்களுக்கு பணிக்கொடையாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் செயலாளர் கலையரசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story