எல்.ஐ.சி.முகவர்கள் ஆர்ப்பாட்டம்


எல்.ஐ.சி.முகவர்கள் ஆர்ப்பாட்டம்
x

திருப்பத்தூரில் எல்.ஐ.சி.முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் எல்.ஐ.சி.முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்ட எல்.ஐ.சி.முகவர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பத்தூர் கிளை தலைவர் பி. மணி தலைமை வகித்தார். செயலாளர் என்.வெங்கடாசலம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஐ ஆர்.டி.ஏ. கமிஷன் குறைப்பு முன்மொழிவை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் வேலு, கோட்ட துணை செயலாளர் காளியப்பன், வி.லி. சீனிவாசன், தேவராஜ், ஜி. ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜி.முருகன் நன்றி கூறினார்.



Next Story