வீடுகளில் உரங்களை பதுக்கி விற்பனை செய்தால் உரிமம் ரத்து


வீடுகளில் உரங்களை பதுக்கி விற்பனை செய்தால் உரிமம் ரத்து
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் வீடுகளில் உரங்களை பதுக்கி விற்பனை செய்தால் அவர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வீடுகளில் உரங்களை பதுக்கி விற்பனை செய்தால் அவர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது:-

புகார் தெரிவிக்கலாம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் சில இடங்களில் உரங்களை கடையில் வைத்து விற்பனை செய்யாமல் வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகவும், இதனால் அதன் அருகில் வசிப்பவர்களுக்கு பல்வேறு உடல் நல குறைவுகள் ஏற்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதைத்தொடர்ந்து இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி மாவட்டத்தில் எங்காவது வீடுகளில் உரங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தால் அந்த நபர்கள் குறித்த தகவல்களை உடனடியாக அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு தெரிவிக்கலாம்.

உரிமம் ரத்து

திருப்பத்தூர் வட்டாரம்- 9500901367, கந்திலி வட்டாரம் - 6382009282, நாட்டறம்பள்ளி வட்டாரம்- 9489723638, மாதனுர் வட்டாரம் - 9489923724, ஜோலார்பேட்டை வட்டாரம் - 8667458632, ஆலங்காயம் வட்டாரம் - 9361791499 மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) 9894869814 ஆகிய எண்களில் பொதுமக்கள் எந்த நேரமும் புகார் தெரிவிக்கலாம்.

மேலும் வீடுகளில் உரங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தால் அவர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

இந்தவேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story