2 பேருக்கு ஆயுள் தண்டனை
விருதுநகர் அருகே பால் வியாபாரியை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
விருதுநகர் அருகே பால் வியாபாரியை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
வியாபாரி கொலை
விருதுநகர் அருகே உள்ள அயன்ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசமூர்த்தி (வயது40). பால்வியாபாரி. சொத்து பிரச்சினை காரணமாக இவரை இவரது உறவினர்களான ராமராஜ் (60), ராமச்சந்திரன் (57), முத்துராமன் (27), ராஜேந்திரன் (30), ராஜபாண்டி (24) ஆகிய 5 பேரும் கொலை செய்ததாக மல்லாங்கிணறு போலீசார் மேற்படி 5 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்த வழக்கு விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
2 பேருக்கு ஆயுள் தண்டனை
இந்த வழக்கை கூடுதல் மாவட்ட நீதிபதி ஹேமானந்த குமார் விசாரித்து ராமராஜ், ராமச்சந்திரன் ஆகியோருக்கு 6 மாத ஜெயில் தண்டனையும் தலா ரூ.500 அபராதமும் விதித்தார்.
அதேபோல முத்துராமன் மற்றும் ராஜேந்திரனுக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.5,500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் இருந்து ராஜபாண்டி விடுவிக்கப்பட்டார்.