4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை


4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
x

பாம்பன் அருகே முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

பாம்பன் அருகே முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

முதியவர் கொலை

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்னப்பாலம் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி (வயது 80). திருமணமாகி குழந்தைகள் உள்ள இவர் கடந்த 21 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வள்ளி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு மண்டபத்தில் வீடு பிடித்து குடும்பம் நடத்தி வந்தாராம்.

இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக முனியசாமி வள்ளியை விட்டு பிரிந்து அவரது மனைவி வீட்டிற்கு வந்துவிட்டாராம். இதனை அறிந்த வள்ளியின் உறவினர்களான சின்னப்பாலம் முனியசாமி மகன் முனீஸ்வரன் (28) தரப்பினர் ஆத்திரத்தில் இருந்தார்களாம்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 3-ந் தேதி முதியவர் முனியசாமி டீ குடித்து விட்டு பாம்பன் சின்னப்பாலத்தில் நடந்து வந்து கொண்டிருந்தாராம். அப்போது சின்னப்பாலம் பகுதியை சேர்ந்த மேற்கண்ட முனீஸ்வரன், நாகரெத்தினம் மகன் சரவணக்குமார் (24), நிர்மல்குமார் என்ற குட்டி (21), உமய செல்வம் மகன் முனீஸ்வரன் (27) ஆகியோர் வள்ளியை தனியாக விட்டு விட்டு வந்துவிட்டாயே என்று கேட்டு முனியசாமியை கீழே தள்ளிவிட்டு காலால் மிதித்து கைகளை பிடித்து இழுத்து சென்று தாக்கினார்களாம்.இதில் தலை உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த முனியசாமி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

4 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்த சம்பவம் தொடர்பாக பாம்பன் போலீசார் வழக்குபதிவு செய்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சீனிவாசன் மேற்கண்ட 4 பேருக்கும் தலா ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அதனை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மனோகரன் ஆஜரானார்.


Related Tags :
Next Story