பெண்ணை வெட்டிக்கொன்ற முதியவருக்கு ஆயுள்தண்டனை


பெண்ணை வெட்டிக்கொன்ற முதியவருக்கு ஆயுள்தண்டனை
x

பெண்ணை வெட்டிக்கொன்ற முதியவருக்கு ஆயுள்தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கரூர்

முதியவர்

கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள சேவாப்பூரை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 55). இவரின் கணவர் பிரிந்து சென்ற நிலையில், இதே பகுதியை சேர்ந்த ராமசாமி (72) என்பவருடன் கடந்த பல ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. பழனியம்மாளின் தங்கை மகன் கடந்த 2 ஆண்டுகளாக பழனியம்மாள் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.பழனியம்மாள் வீட்டில் அவர் தங்கியது ராமசாமிக்கு பிடிக்கவில்லை. இதனால் பழனியம்மாளை ராமசாமி கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி பழனியம்மாள் வீட்டிற்கு ராமசாமி வந்துள்ளார்.

ஆயுள் தண்டனை

அப்போது ராமசாமிக்கும், பழனியம்மாளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமசாமி, பழனியம்மாளை அரிவாளால் வெட்டியதில் பழனியம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமசாமியை கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நீதிபதி நசீமாபானு நேற்றுமுன்தினம் வழங்கிய தீர்ப்பில், ராமசாமிக்கு ஆபாசமாக திட்டியதற்காக 3 மாதங்கள் சிறைத்தண்டனையும், ரூ.100 அபராதமும், அதனை செலுத்த தவறினால் மேலும் 15 நாட்கள் சிறைத்தண்டனையும், வெட்டிக்கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ.100 அபராதமும், அதனை கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனையும் விதித்ததோடு, இதனை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.


Next Story