கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 53). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.


Next Story