10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்தஉடற்கல்வி ஆசிரியருக்கு ஆயுள் தண்டனைசேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு


10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்தஉடற்கல்வி ஆசிரியருக்கு ஆயுள் தண்டனைசேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு
x
தினத்தந்தி 17 Jun 2023 1:59 AM IST (Updated: 17 Jun 2023 3:46 PM IST)
t-max-icont-min-icon
சேலம்

10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த உடற்கல்வி ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

உடற்கல்வி ஆசிரியர்

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த மல்லியக்கரை அருகே உள்ள மஞ்சினி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாஜலம். இவருடைய மகன் காங்கமுத்து (வயது 37). இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவர், கடந்த 2020-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை அழைத்து சென்று குழந்தை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தம்மம்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

ஆயுள் தண்டனை

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ந்தேதி காங்கமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை குழந்தை திருமணம் செய்த குற்றத்திற்காக காங்கமுத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து சேலம் போக்சோ கோர்ட்டு நீதிபதி ஜெயந்தி தீர்ப்பளித்தார்.


Next Story