தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
விருதுநகர் அருகே மாமனாரை கொலை செய்த தொழிலாளிக்கு விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதி மன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
விருதுநகர் அருகே மாமனாரை கொலை செய்த தொழிலாளிக்கு விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதி மன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
தொழிலாளி
விருதுநகர் அருகே உள்ள குல்லூர் சந்தை அகதிகள் முகாமை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 39). கூலித் தொழிலாளியான இவரது முதல் மனைவி இறந்து விட்ட நிலையில் முகாமில் வசித்த நாகராஜ் (53) என்பவரின் மகள் ரோஸ்மேரியை 2-வது திருமணம் செய்தார். கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்ட நிலையில் ரோஸ்மேரி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்த 5.4.2016-ல் நந்தகோபால் தனது மனைவி ரோஸ்மேரியை தன்னுடன் வருமாறு அழைக்க சென்றபோது ரோஸ்மேரி சம்மதித்த நிலையில் அவரது தந்தை நாகராஜ் தடுத்ததாக கூறப்படுகிறது.
ஆயுள் தண்டனை
இதனால் ஆத்திரமடைந்த நந்தகோபால் தனது மாமனார் நாகராஜை தாக்கி கழிப்பறை சுவரில் முட்டி கொலை செய்தார்.
இது தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகோபாலை கைது செய்து விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கூடுதல் மாவட்ட நீதிபதி ஹேமந்த் குமார் விசாரித்து நந்தகோபாலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்தார். அத்துடன் அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார்.