தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் காதல் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் காதல் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
பெண் தற்கொலை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரநாச்சியாபுரம் பகுதியை சேர்ந்தவர் காளிராஜா.தொழிலாளி. இவருடைய மனைவி சந்தனமாரி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் ஆன சில மாதங்கள் கழித்து காளிராஜா, சந்தனமாரியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளார். இந்தநிலையில் சந்தனமாரி அரளி விதையை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தூர் புற காவல் நிலைய போலீசார் வரதட்சணை கொடுமை செய்து காதல் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக காளிராஜா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து காளிராஜாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.